தோனி, சச்சின் வரிசையில்.. திரையில் தடம் பதிக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்… விவரம் இதோ…
சினிமாவில் இந்தியாவில் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுப்பது புதிதான விஷயம் இல்லை. ஏற்கனவே எம்.எஸ். தோனி, சச்சின் டெண்டுல்கர், மித்தாலி ராஜ் ஆகியோரின் வாழ்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டிருந்தது.
இதுவரை இந்திய கிரிக்கெட் வீரர்களின் வாழ்கை வரலாறு படமாக்கப்பட்டு வந்த நிலையில், முதன் முறையாக பாகிஸ்தான் வீரரின் வாழ்கை வரலாறு படமாக உருவாகவுள்ளது. அதன்படி, பாகிஸ்தான் அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தரின் வாழ்கை வரலாறு படமாக உருவாகவுள்ளது.
இந்த படத்தை முஹம்மது ஃபராஸ் கைசர் என்பவர் இயக்க, இப்படத்தை க்யூ பிலிம் புரோடக்சன் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு “ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் மோஷன் போஸ்டர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் அடுத்த ஆண்டு நவம்பர் 16-ஆம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
படத்தில் நடிக்கும் நடிகர் யார் என்பதை இன்னும் அறிவிக்கவில்லை. விரைவில் யார் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்பதற்கான அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே சோயிப் அக்தரின் வாழ்கை படமாக உருவாக்கப்பட வுள்ளதாகவும், அதில் பிரபல பாலிவுட் நடிகரான சல்மான் கான் நடிக்கவிருந்ததாக தகவல்கள் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram