31.7 C
Chennai
Friday, June 2, 2023

அதானி விவகாரம்..பிரதமரிடம் கேட்கப்பட்ட 100 கேள்விகள்..! புத்தகத்தை வெளியிட்டது காங்கிரஸ்..!

அதானி விவகாரத்தில் பிரதமரிடம் கேட்கப்பட்ட 100 கேள்விகள் அடங்கிய...

முதலமைச்சர் ஸ்டாலினுடன் டெல்லி, பஞ்சாப் முதல்வர்கள் சந்திப்பு.!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பக்வந்த்...

ஜெயிலர் ஷூட்டிங் ஓவர்…கேக் வெட்டி படக்குழு உடன் கொண்டாடிய ரஜினிகாந்த்.!!

நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில்...

ஒரு நல்ல நடிகரை சினிமா இழந்திருக்கிறது…சரத்பாபு மறைவுக்கு இரங்கல் தெரிவித்த கமல்ஹாசன்.!!

பிரபல நடிகரான நடிகர் சரத்பாபு இவர் கடந்த நாட்களாகவே உடல்நலக்குறைவு காரணமாக ஹைதராபாத்தில் ஏஜிஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இவருடைய மறைவு திரைத்துறையில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதனையடுத்து, இவருடைய மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் தங்களுடைய இரங்கலை சமூக வலைத்தளங்களின் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில், நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார். அதில் ” சிறந்த நடிகரும், அருமை நண்பருமான சரத்பாபு மறைந்துவிட்டார். அவருடன் இணைந்து நடித்த நாட்கள் என் மனதில் நிழலாடுகின்றன. தமிழில் என் குருநாதரால் அறிமுகப்படுத்தப்பட்டவர். காலத்தால் அழியாத பல பாத்திரங்களை ஏற்று சிறப்பு செய்தவர். ஒரு நல்ல நடிகரை சினிமா இழந்திருக்கிறது. அவருக்கு என் அஞ்சலி” என பதிவிட்டுள்ளார்.

மேலும், மறைந்த நடிகர் சரத்பாபு உலகநாயகன் கமல்ஹாசன் உடன்  சலங்கை ஒலி, ரஜினிகாந்த் உடன் முத்து, அண்ணாமலை போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த படங்களில் இவர் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.