யூரோ 2020:மைதானத்திலே மயங்கி விழுந்த டென்மார்க் வீரர் கிறிஸ்டியன் எரிக்சன்

யூரோ 2020 கால்பந்து போட்டியில் மைதானத்திலே மயங்கி விழுந்த டென்மார்க் வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் பாதியிலே நிறுத்தப்பட்ட ஆட்டம்.

யூரோ 2020 கால்பந்து தொடரின் இன்றைய ஆட்டத்தில் பின்லாந்து மற்றும் டென்மார்க் ஆகியவை மோதின.ஆனால் ஆட்டம் தொடங்கிய முதல் பாதியின் பிற்பகுதியில் டென்மார்க் அணியின் நட்சத்திர வீரர் யூரோ 2020 கால்பந்து போட்டியில் மைதானத்திலே மயங்கி விழுந்த டென்மார்க் வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் மைதானத்தில் தீடிரென மயங்கி விழுந்தார்.

மருத்துவ குழுவினர் உடனடியாக அவருக்கு ஆடுகளத்திலே 10 நிமிடங்களுக்கு  முதலுதவி சிகிச்சை அளித்தனர்.அதன் பின்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவமனையில் “கிறிஸ்டியன் எரிக்சன் கண் விழித்துவிட்டதாகவும் , மேலும் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறார்” என்று டேனிஷ் கால்பந்து யூனியன் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

முதல் பாதியின் பிற்பகுதியில் எரிக்சன் தன்னிடம் வந்த பந்தை எதிர்கொள்ளும்போது நிலை தடுமாறி கீழே விழுகிறார்.அதன் பின்பு மருத்துவ குழுவினர் துரிதமாக செயல்பட்டு அவருக்கு மைதானத்திலே முதலுதவி சிகிச்சை அளித்தனர்.சிகிச்சை அளிக்கும் போது டென்மார்க் வீரர்கள் எரிக்சனை சுற்றி கண்ணீருடன் நின்றுகொண்டிருந்தனர்.

author avatar
Dinasuvadu desk