தனது குழந்தையை கூட பார்க்காமல் சிரஞ்சீவி இறந்து விட்டாரே.! மீண்டும் சோகத்தில் ஆழத்திய செய்தி.!

மாரடைப்பால் மரணமடைந்த கன்னட நடிகரான சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவி மேக்னா 4மாத

By ragi | Published: Jun 09, 2020 06:17 PM

மாரடைப்பால் மரணமடைந்த கன்னட நடிகரான சிரஞ்சீவி சார்ஜாவின் மனைவி மேக்னா 4மாத கர்ப்பமாக உள்ளதாக கூறப்படுகிறது.

பிரபல கன்னட நடிகரான சிரஞ்சீவி சார்ஜா 'Vayuputra' என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமானவர். அதனையடுத்து ராஜமார்தாண்டா, ஏப்ரல், ரணம் உள்ளிட்ட பல படங்களை நடித்துள்ளார். இவர் 'காதல் சொல்ல வந்தேன்' படத்தின் மூலம் பிரபலமான மேக்னா ராஜ் என்பவரை 2018ல் திருமணம் செய்து கொண்டார்.

மேலும் இவர் ஆக்ஷன் கிங் அர்ஜுன் அவர்களின் மருமகனும், துருவ் சார்ஜா அவர்களின் சகோதரரும் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது. நான்கு படங்களில் நடித்து கொண்டிருக்கும் சிரஞ்சீவி சார்ஜா திடீரென மாரடைப்பால் நேற்றைய முன்தினம் காலமானார். 39 வயது மட்டுமே உடைய சிரஞ்சீவியின் மரணம் ஒட்டுமொத்த திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியது. தற்போது மீண்டும் ஒரு வருத்தமான செய்தி என்னவென்றால் சிரஞ்சீவியின் மனைவியான மேக்னா தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளதாக கூறப்படுகிறது. தனது குழந்தையை கூட பார்க்க இயலாமல் சிரஞ்சீவி இறைவனிடம் சென்று விட்டாரே என்று புலம்பி வருகின்றனர்.

Step2: Place in ads Display sections

unicc