சின்மயி-யின் மீ டூ விவகாரம்…! கோர்ட் அதிரடி தீர்ப்பு….!!!

  • கடந்த சில நாட்களாகவே மீடூ விவகாரம் சூடு பிடித்து வருகிறது.
  • சென்னை உரிமையியல் நீதிமன்றம் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

கடந்த சில நாட்களாகவே மீடூ விவகாரம் சூடு பிடித்து வருகிறது. இதில் பெண் நடிகர்கள் பலர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டது குறித்து பலரும் புகார் அளித்து வந்தனர்.

இந்நிலையில், பாடகி சின்மயியும் புகார் அளித்திருந்தார். இவர் டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால், தற்போது தமிழ் சினிமாவில் பணியாற்றமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, சின்மயி இது பற்றி கூறுகையில், தன்னை வேண்டுமென்றே பழிவாங்கிவிட்டதாக குற்றம் சாட்டி வந்தார். இந்நிலையில், இதுகுறித்து அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இவர் அளித்த புகாருக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. சென்னை உரிமையியல் நீதிமன்றம் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

இதுகுறித்து சின்மயி தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். பெரிய சட்டப்போராட்டம் காத்திருப்பதாக சின்மயி பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment