விமான நிலையம் வந்த சீன பயணி.! திருப்பி அனுப்பிய சுகாதாரத்துறை.!

  • உலகெங்கும் கொரோனா வைரஸ் பீதியில் உள்ள நிலையில், ராமேஸ்வரம் செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த சீன பயணி ஒருவரை சந்தேகம் அடைந்த போலீசார், மருத்துவ பரிசோதனை செய்து வைரஸ் இல்லையென்றாலும், அரசின் அறிவுருத்தலின் அவரை திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

சீனாவில் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பல நகரங்களில் பரவி நாளுக்கு நாள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் 25க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இதன் விளைவு காரணமாக உலகநாடுகள் அனைத்தும் சர்வேதேச விமான நிலையங்களில் சீனாவில் இருந்து வரும் பயணிகளை தீவிர பரிசோதனை செய்ததுக்கு பிறகே அனுமதிக்கப்படுவார்கள். இந்த வைரஸ் வேகமாக பரவி வருவதால் சீனாவில் இருந்து வருபவர்களுக்கு தற்போது அனுமதி இல்லை என்று அறிவித்தது. உலகெங்கும் கொரோனா வைரஸ் பீதியில் உள்ள நிலையில், சீனாவை உலக நாடுகள் தனிமை படுத்தியுள்ளன. அந்த வகையில்

சீனாவின் அன்கியுன்ங் மாகாணத்தில் 42 வயதான வு சென் சூ என்பவர் ஆசிரியராக பணி புரிகிறார். இவர், கடந்த ஜனவரி மாதம் 28-ம் தேதி விமானம் மூலம் கொல்கத்தா வந்துள்ளார். பின்னர், பல்வேறு இடங்களில் பார்வையிட்டு இறுதியாக ராமேஸ்வரம் செல்வதற்கு நேற்று இரவு  (சனிக்கிழமை) மதுரை விமான நிலையம் வந்துள்ளார். இவரது நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த மண்டபம் சுகாதாரத்துறையினர், போலீஸார் உதவியுடன் அவரை சோதனை செய்தனர். அப்போது இவர் சீனாவைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்ததையடுத்து, போலீசார் உதவியுடன் மண்டபம் வட்டார சுகாதார அலுவலர் மற்றும் மேற்பார்வையாளர் ஆகியோர் மதுரை விமான நிலையத்தில் உள்ள மருந்துவ குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்நிலையில், வு சென் சூ வை சுகாதர குழுவினர் தீவிர பரிசோதனை செய்து, உடனடியாக அவரை சென்னைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மருத்துவ குழுவினர் பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இல்லையென்றாலும், இந்திய அரசு அறிவுருத்தலின் அங்கிருந்து உடனடியாக அவர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த நிகழ்வால் மதுரை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்