ஐபோனுக்காக கிட்னி விற்ற இளைஞர் உயிருக்கு போராட்டம்.!

சீனாவை சார்ந்த 26 வயதான வாங் ஷங்குன் என்ற இளைஞர் ஆப்பிள் ஐபோன் மற்றும் ஐபாட் வாங்க 2011- இல் தனது இரண்டு சிறுநீரகங்களில் ஒன்றை விற்றுள்ளார். 2011 இல் அவருக்கு 18 வயது.

அந்த இரண்டு பொருள்களையும் பெற வாங் ஷங்குன் ஆசைப்பட்டார். இதற்கிடையில், அவரது குடும்பத்திடம் போதிய வசதி இருந்ததால் அந்த நேரத்தில் அவர் ஒரு ஆன்லைன் உறுப்பு தானம் விளம்பரத்தைப் பார்த்துள்ளார்.

அந்த விளம்பரத்தை பார்த்தவுடனேயே அவன்  தனது ஒரு சிறுநீரகத்தை விற்க முடிவு செய்தான். பின்னர், சீனாவின் உகான் மாகாணத்தில் உள்ள ஒரு கிளினிக்கில் சட்டவிரோத அறுவை சிகிச்சை செய்துகொண்டான். அப்போது ஷங்குன் மைனராக இருந்தார்.

அவரது பெற்றோரின் ஒப்புதல் கிளினிக்கிலிருந்து பெறப்படவில்லை. ஒரு சிறுநீரகம் விற்றதும் ஷங்குனுக்கு 20,000 யுவான் அதாவது இந்திய மதிப்பில் சுமார் இரண்டரை லட்சம் பணத்தை பெற்று அவன் விரும்பிய ஆப்பிளின் ஐபோன் மற்றும் ஐபாட்டை வாங்கினார்.

அறுவை சிகிச்சைக்கு சில மாதங்களுக்குப் பிறகு, மீதமுள்ள ஒரு சிறுநீரகத்தில் அவருக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதனால், அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இப்போது முற்றிலும் படுக்கையில் இருக்கிறார். இதனால், அவருக்கு டயாலிசிஸ் ஒவ்வொரு நாளும் தேவைப்படுகிறது.

இந்த சம்பவம் 2011 இல் நடைபெற்றது. இந்த சம்பவம் தொடர்பாக சீன போலீசார் இதுவரை 9 பேரை கைது செய்துள்ளனர். அவர்களில் இரண்டு அறுவை சிகிச்சை நிபுணர்களும் உள்ளனர். ஆனால், சீனாவில் ஷங்குன் சம்பவமும் இதற்கு விதிவிலக்கல்ல. சீனாவில் பல இளைஞர்கள் இன்னும் ஐபோன் போன்ற விலையுயர்ந்த பொருள்களை வாங்க தங்களின் உறுப்புகளை விற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan

Leave a Comment