மக்களே உஷார்.. பிளிப்கார்ட், அமேசான் பண்டிகை விற்பனையை குறிவைக்கும் சீன ஹேக்கர்கள்!

சீனாவை மையமாக கொண்ட ஹேக்கர்ஸ், ஆன்லைன் பண்டிகை விற்பனையை குறிவைத்து தற்பொழுது நமது தகவல்களை திருட தொடங்கினார்கள். அதாவது பிளிப்கார்ட், அமேசான் பண்டுகால விற்பனை போல தாமே ஒரு லிங்கை உருவாக்கி அதனை நமது வாட்ஸ் ஆப் உள்ளிட்ட செயலிகள் மூலம் அனுப்புவார்கள். அதற்குள் நாம் சென்றால் நமது மொபைலில் இருக்கும் தகவல்கள், ஹேக்கர் கைக்கு சென்றுவிடும்.

அந்தவகையில், சீனாவின் குவாங்டாங் மற்றும் ஹெனான் மாகாணத்தைச் சேர்ந்த ஹேக்கர்கள் இதனை செய்து வருவதாக புதுடெல்லியை தளமாகக் கொண்ட சைபர்பீஸ் நிறுவனம் கண்டறிந்துள்ளது. மோசடி செய்பவர்கள், ‘அமேசான் (பிளிப்கார்ட்) அல்லது பிக் பில்லியன் டே சேல்’ என அந்த லிங்கில் குறிப்பிட்டு, OPPO F17 Pro மேட் பிளாக், 8 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் ஸ்மார்ட்போனை வெல்லக்கூடியவாய்ப்பினை பெறுவீர்கள். என்றும், இதில் கிளிக் செய்து பங்கேற்க வேண்டும் என குறிப்பிடுவர்.

அவ்வாறு நாம் உள்ளே சென்றால் நமக்கு இந்த போன் கிடைத்துவிட்டதாகவும், தங்கள் நண்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் வாட்ஸ்அப் வழியாக இந்த லிங்கை பகிர்ந்துகொண்டால் கிடைத்துவிடும் என வரும். இதனை நம்பி நாமும் பகிர்ந்து விடுவோம். எனவே இதுபோன்ற லிங்க் வந்தால் உள்ளே செல்வதை தவிர்த்தால் உங்களின் மொபைலில் இருக்கும் தகவல்கல் திருடப்படுவதை தவிர்க்கலாம்.