அருணாச்சல பிரதேசத்திற்கு அருகில் மூன்று கிராமங்களை கட்டமைத்த சீனா

அருணாச்சல பிரதேசத்திற்கு அருகில் மூன்று கிராமங்களை கட்டமைத்த சீனா

வடகிழக்கு இந்தியாவில் உள்ள அருணாச்சல பிரதேசத்திற்கு அருகில் மூன்று கிராமங்களை சீனா கட்டியுள்ளது.அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பம் லா பாஸிலிருந்து சுமார்  ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இந்த கிராமங்கள் கட்டப்பட்டுள்ளன.

இது மேற்கு அருணாச்சல பிரதேசத்தில் அமைந்துள்ள இந்தியா, பூட்டான் மற்றும் சீனா இடையேயான முக்கோணத்திற்கு அருகில் உள்ளது. புதிதாக கட்டப்பட்டுள்ள  கிராமங்கள் அருணாச்சல பிரதேச எல்லையில் சீனாவின் உரிமையை  வலுப்படுத்துவதற்கான ஒரு படியாக இருக்கலாம்.

இந்தியா-சீனா உறவுகள் குறித்த நிபுணர் பிரம்மா செல்லானி கூறுகையில், ” இந்திய எல்லையில் சீனா தனது பிராந்திய உரிமைகோரல்களை வலுப்படுத்தவும், எல்லை ஊடுருவல்களை அதிகரிக்கவும் பயன்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.கிழக்கு லடாக்கில் இந்திய மற்றும் சீன வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டபோது இவை கட்டப்பட்டன என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிளானட் ஆய்வகங்களிலிருந்து எடுக்கப்பட்ட படங்களின் படி , இந்த ஆண்டு பிப்ரவரி ஒரு கிராமம் மட்டுமே இப்பகுதியில் கட்டப்பட்டுள்ளது.ஆனால் இந்த நவம்பர் மாதத்திற்குள் மூன்று கிராமங்கள் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Join our channel google news Youtube