சீனா: 200 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி புதிய மைல்கல்..!

சீனா: 200 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி புதிய மைல்கல்..!

சீனாவில் 200 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி புதிய மைல்கல் சாதனை படைத்துள்ளது. 

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை பெருமளவு பாதிப்புகளையும் சேதங்களையும் ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றனர். அதன்படி, பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி தீவிரமாக செலுத்தப்படுகிறது.

தற்போது சீனாவில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் புதிய மைல்கல் சாதனை படைத்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமைபடி, தற்போது வரை சீன மக்கள் தொகையில் 88.9 கோடி மக்களுக்கு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர். சீனாவின் 140 கோடி மக்கள் தொகைக்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி செலுத்தவுள்ளதாக இலக்கு நிர்ணயித்துள்ளனர்.

மேலும், சீனாவில் போடப்படும் கொரோனா தடுப்பூசியின் செயல்திறன் 70 விழுக்காடு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டின் இறுதிக்குள் சீன மக்கள்  அனைவரும் நோய் எதிர்ப்பு சக்தி பெற்றுவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Join our channel google news Youtube