கொரோனா வைரஸ் தாக்குதல் பலி எண்ணிக்கை அதிகரிப்பு.. உலக நாடுகளை உறைய வைக்கும் உண்மை செய்தி..

  • கொரோனா வைரஸ் தாக்குதலுக்கான பலி எண்ணிக்கை அதிகரிப்பு.
  • அச்சத்தில் அகில உலகமும்.

நம் அண்டை நாடான சீனாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை தற்போது 17 ஆக அதிகரித்துள்ளது. இந்த வைரஸ் காய்ச்சலால் 440 பேருக்கும் மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் கொரோனா வைரஸ் எனப்படும் புதிய வைரஸ் காய்ச்சல் கடந்த சில நாட்களாக பரவி அந்நாட்டையே அச்சுருத்தி வருகிறது. இது மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் வரை 4 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், பலி  எண்ணிக்கை நேற்று மேலும் அதிகரித்துள்ளது. இந்த காய்ச்சல் தாக்கியவர்கள்  கடுமையான சுவாச பிரச்னையால் பாதிக்கப்பட்டு உயிரிழக்க நேரிடுகிறது.  நேற்று முன்தினம் வரை 13 மகாணங்களை சேர்ந்த 440 பேர் கொரோனா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.  இவர்களுக்கு தொடர்ந்து சிகிசிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த தகவல் சீனாவை மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.