எல்லையில் 60,000 வீரர்களை சீனா குவிப்பு .. மைக் பாம்பியோ..!

இந்திய எல்லையில் 60000 வீரர்களை சீனா நிறுத்தியுள்ளதாக  அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பாம்பியோ டோக்கியோவிலிருந்து திரும்பி வந்துள்ளார். அங்கு அவர் இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் குவாட் குழு  கூட்டத்தில் கலந்துகொண்டார். அதன் பின்னர் பேசிய மைக் பாம்பியோ, இந்தியாவின் வடக்கு எல்லையில் 60000 வீரர்களை சீனா நிறுத்தியுள்ளது  என தெரிவித்தார்.

குவாட் குழுவில் அமெரிக்கா, ஜப்பான், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் உள்ளன. குவாட் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கடந்த செவ்வாய் அன்று டோக்கியோவில் சந்தித்தனர். கொரோனா வைரஸ் தொற்றுநோய் தொடங்கிய பின்னர் இவர்கள் நேருக்கு நேர் சந்திப்பது இதுவே முதல் முறையாகும.

கிழக்கு லடாக்கில் பல மாதங்களாக இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூன் 15 அன்று கால்வன் பள்ளத்தாக்கில் நடந்த மோதல்களுக்குப் பிறகு, பதட்டங்கள் நிறைய அதிகரித்துள்ளன. இந்த மோதலில், இந்தியாவின் 20 வீரர்கள் உயிரிழந்தனர்.  இந்த மோதலில் சீனத் தரப்பைச் சேர்ந்த வீரர்கள் உயிரிழந்ததாகவும் செய்திகள் வந்தன, ஆனால் இதுவரை எவ்வளவு வீரர்கள் உயிரிழந்தார்கள் என்ற விவரத்தை சீனா வெளியிடவில்லை.

இந்த மோதலுக்கு தீர்வு காண இரு தரப்பிலும் பல முறை இராணுவ மட்ட பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன, ஆனால் இதுவரை எந்த தீர்வும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan