அமெரிக்க அதிபராக அறிவிக்கப்பட்ட ஜோ பைடனுக்கு சீனா வாழ்த்து!

அமெரிக்க அதிபராக அறிவிக்கப்பட்ட ஜோ பைடனுக்கு சீனா வாழ்த்து.

கடந்த 3-ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது.  இந்த தேர்தலில், அதிக வாக்குகளை பெற்று ஜோ பைடன் வெற்றிக்கனியை தட்டி சென்றார். இந்நிலையில், ஜோ பைடன் அதிபராகவும், கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இவர்களுக்கு பிற நாட்டை சேர்ந்த அரசியல் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், சீன அரசு இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. அந்த வாழ்த்தின்படி, சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் வாங் வென்பின்,’அமெரிக்க மக்களின் தேர்வை நாங்கள் மதிக்கிறோம். பைடன் மற்றும் கமலா ஹாரிஸுக்கு எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.’ என  தனது வாழ்த்து செய்தியை பகிர்ந்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.