குழந்தைகளுக்கு நாம் என்னென்ன கற்றுக்கொடுக்க வேண்டும்? என்னென்ன கற்றுக்கொடுக்க கூடாது?!

குழந்தைகள் தினம் நாடு முழுவதும் வருகிற இம்மாதம் (நவம்பர்) 14ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. நம் நாட்டின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு பிறந்தநாளை தான் நம் நாட்டில் குழந்தைகள் தினமாக கொண்டாடி வருகிறோம்.
இந்நாளில் குழந்தைகளுக்கு பல நல்ல பழக்க வழக்கங்களை கற்றுக்கொடுக்க வேண்டும். அவர்கள் வருங்கால எண்ணங்கள் சிறப்பாக அமைய வேண்டும் என்றுதான் குழந்தைகள் தினத்தன்று பள்ளிகளில் ஓவியம், பேச்சு, கட்டுரை என குழந்தைகளின் திறனறியும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அவர்களின் எண்ணங்களை மேம்படுத்தப்படுத்துகின்றனர்.
அதே வேளையில் அவர்களுக்கு நல்ல பழக்க வழக்கங்களை பழகிக்கொடுப்பதும் நமது தலையாய கடமை. ‘ஐந்தில் வளையாதது. ஐம்பதில் வளையாது.’ என்ற பழமொழி போல குழந்தைகளுக்கு அவர்களுக்கு புரியும் வண்ணம் நாமும் குழந்தையாகி நல்ல பழக்கவழக்கங்களை பழக்க வேண்டும்.
பிறருக்கு உதவ வேண்டும். மற்ற குழந்தைகளை அழ வைத்துவிட கூடாது. துன்புறுத்தக்கூடாது. என குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும். அடுத்து  குழந்தைகள் முன் பெரியவர்கள் சண்டை போட கூடாது. மேலும், கெட்ட வரத்தை பேச கூடவே கூடாது.  நாம் என்ன செய்கிறோமோ அதனையே குழந்தைகள் நம்மிடம் பிரதிபலிப்பார்கள் ஆதலால் நாம் எதனை குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கிறோம் என்பதை விட எந்த கெட்ட விஷயத்தையும் குழைந்தைகள் கற்றுக்கொள்ள நாம் காரணமாயிருக்க கூடாது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.