முழுமையான பரிசோதனைக்கு பின் தான் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் – டெல்லி உயர்நீதிமன்றம்

முழுமையான பரிசோதனைக்கு பின் தான் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில் இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், 18 வயதுக்கு கீழ் உள்ள சிறார்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கான பரிசோதனைகள் நடந்து வருகிறது. இதனையடுத்து, கொரோனா வைரசின் மூன்றாவது அலை குழந்தைகளை பாதிக்கும் என்பதால் குழந்தைகளுக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்ற வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், இது தொடர்பாக பதிலளித்த மத்திய அரசு 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான பரிசோதனைகள் இறுதிக் கட்டத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளது. வல்லுநர்கள் அனுமதி அளித்த பின் அதற்கான கொள்கைகள் உருவாக்கப்பட்டு குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படும் என தெரிவித்துள்ளது.

அப்போது குறுக்கிட்ட நீதிமன்றம் முழுமையான பரிசோதனைக்கு பின்பு தான் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து, வழக்கின் விசாரணை வரும் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.