குழந்தை விற்பனை : இடைத்தரகர் ரேகாவை 14 நாள் நீதிமன்றக்காவலில் வைக்க உத்தரவு

பெங்களூருவை சேர்ந்த இடைத்தரகர் ரேகாவை  14 நாள் நீதிமன்றக்காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே ‌குழந்தை விற்பனையில் ஈடுபட்டதாக ராசிபுரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற செவிலியர் அமுதா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் மற்றும் தரகர்கள் உட்பட 9 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவு பிறப்பித்தார்.

இன்று வழக்கில் இடைத்தரகராக செயல்பட்ட பெங்களூரை சேர்ந்த ரேகா என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.பின் நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் ரேகா ஆஜர்படுத்தப்பட்டார்.இதை விசாரித்த நீதிபதிகள்,பெங்களூருவை சேர்ந்த இடைத்தரகர் ரேகாவை  14 நாள் நீதிமன்றக்காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.மே 31 வரை ரேகாவை சிறையில் அடைக்க நாமக்கல் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Leave a Comment