34.4 C
Chennai
Friday, June 2, 2023

பேனர் விவகாரம்: தனிக்குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் -கோவை ஆட்சியர் கிராந்திகுமார்.!!

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் விளம்பர பலகை சரிந்து விழுந்ததில்...

விஜய்க்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்…தளபதி 68 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்.!!

நடிகர் விஜய் தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார்....

#JustNow : முதல்வரின் டெல்லி பயணம் ரத்து..! என்ன காரணம்..?

முதல்வர் டெல்லி செல்லவிருந்த விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதன் காரணமாக பயணம் ரத்து. 

சென்னை பெருநகரத்தில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஒன்று அமைக்கப்படும் என்று ஏற்கனவே முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டையொட்டி சென்னை, கிண்டி. கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை திறந்து வைப்பதற்காக குடியரசுத் தலைவர் திருமதி.திரௌபதி முர்மு அவர்களுக்கு அழைப்பு விடுப்பதாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் 8 மணியளவில் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டார்.

முதல்வர் பயணம் ரத்து 

MK Stalin
[Image source : India Today]

இந்த நிலையில், முதல்வர் டெல்லி செல்லவிருந்த விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விமானம் தாமதமான நிலையில்,  சென்னை விமான நிலையத்தில் 1 மணி நேரம் காத்திருந்து வீடு திரும்பியதாகவும், நாளை காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.