முதலமைச்சரின் கள ஆய்வு ஆலோசனை..! அதிகாரிகள் பணியிட மாற்றம்..!

முதலமைச்சரின் கள ஆய்வு ஆலோசனை..! அதிகாரிகள் பணியிட மாற்றம்..!

Chief Minister MKStalin

முதலமைச்சரின் கள ஆய்விற்கு பிறகு 3 மாவட்டங்களில் உள்ள அதிகாரிகள் மாற்றம் செய்யப்படவுள்ளனர்.

தமிழ்நாடு அரசின் மூலமாக ஊரக வளர்ச்சித்துறை, வருவாய் துறை, காவல் துறை மற்றும் பள்ளிக்கல்வித் துறையில் சில பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கும் கள ஆய்வில் முதல்வர் திட்டத்தின் கீழ் 3 மாவட்ட அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியிருந்தார். இந்நிலையில், முதலமைச்சரின் கள ஆய்விற்கு பிறகு விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சியில் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.

அந்தவகையில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குநர் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக திருமதி. எஸ். செல்வராணி நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. பூவராகவன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக திரு. ம. ராஜசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கள ஆய்வில் முதல்வர் திட்டத்தின் கீழ் 3 மாவட்ட அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தியிருந்தார்.  கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குநர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சரஸ்வதி, கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர், விழுப்புரம் நகர டிஎஸ்பி பார்த்திபன் ஆகியோர் மாற்றப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி. ஜி. சரஸ்வதி மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக திருமதி. கோ.கிருஷ்ணபிரியா பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார், மேலும், விழுப்புரம் நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு.பார்த்திபனும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.
Join our channel google news Youtube