#BREAKING: உள்ளாட்சி தேர்தல் குறித்து முதல்வர் ஆலோசனை..!

9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலை வரும் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் நடத்தி, அதன் முடிவுகளை அறிவிக்க மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர், கே.என்.நேரு, ஊராட்சிகள் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் ஆகியோருடன் முதல்வர் ஆலோசனை ஈடுபட்டுள்ளார்.

முதலமைச்சர் இரு அமைச்சருடன் தனித்தனியாக ஆலோசித்து வருகிறார். இந்த ஆலோசனையில் தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளார்.

author avatar
murugan