முதலமைச்சர் பழனிசாமி  இனியாவது காதில் பூ சுற்றுவதை நிறுத்த வேண்டும் - உதயநிதி

முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் இனியாவது

By venu | Published: Jul 11, 2020 07:00 AM

முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் இனியாவது காதில் பூ சுற்றுவதை நிறுத்திக்கொண்டு நோயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உதயநிதி தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள் அன்பழகன், தங்கமணி,செல்லூர் ராஜு ஆகியோர் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் 8 எம்.எல்.ஏக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முன்னர் திமுக எம்எல்ஏ அன்பழகன் கொரோனவால் உயிரிழந்து விட்டார்.

இந்நிலையில் திமுக இளைஞர் அணியின் செயலாளர் உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில்,‘நிவாரணம் வழங்கியதாலே அண்ணன் ஜெ.அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்’ என அவரின் தியாகத்தை அடிமை ‘அசிங்க’ கூஜாக்கள் கொச்சைப்படுத்தினர். ஆனால் வீட்டு வாசலைக்கூட தாண்டாத அமைச்சர்கள், அதிமுக MLAக்களை கொரோனா தொற்றிவருகிறது. அந்த வரிசையில் இன்று ஓர் அமைச்சருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

இவர்கள் அனைவரும் உடல்நலன் தேறி வரவேண்டும் என வாழ்த்தும் அதேசமயம், ‘எல்லோருக்கும் வந்தால்தான் சமூக பரவல்’ என வாய்க்கு வந்ததெல்லாம் அறிவியல் என அவிழ்த்துவிடும் முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் இனியாவது காதில் பூ சுற்றுவதை நிறுத்திக்கொண்டு நோயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பார் என நம்புவோம் என்று தெரிவித்துள்ளார்.

Step2: Place in ads Display sections

unicc