காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்டத்தில்  முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆய்வு செய்கிறார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பே அதிகரித்து வருகிறது.இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனிடையே தமிழக முதலமைச்சர் பழனிசாமி மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

மாவட்ட ஆட்சியர்கள் ,அதிகாரிகளிடம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்கிறார்.மேலும் திட்டங்களையும் தொடங்கி வைத்து வருகிறார்.  இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆய்வு செய்கிறார்.மேலும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்  ,அதிகாரிகளிடம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்கிறார்.