டெல்லியில் அம்மா பெயரில் கட்டப்பட்டுள்ள 8வது பள்ளிக் கட்டடத்தை திறந்து வைத்த முதல்வர் பழனிசாமி.!

டெல்லியின் மயூர் விகார் பகுதியில் தமிழ்க் கல்விக் கழகத்தின் சாா்பில் அம்மா  பெயரில் கட்டப்பட்டுள்ள 8வது பள்ளிக் கட்டடத்தின் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார்.

இந்த கட்டடத்துக்கு ரூ.13 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டது. இதற்கு, தமிழக அரசு ரூ.5 கோடி நிதியுதவி ஒதிக்கீடு செய்துள்ளது, இதுவரை, ரூ.3.75 கோடி நிதியை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தலைநகர் டெல்லியில் கடந்த 90 ஆண்டுகளாக டெல்லி தமிழ்க் கல்விக் கழகத்தால் ஏழு இடங்களில் மொழிவாரி சிறுபான்மையின மேல்நிலைப் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இப்பள்ளிகளில், முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை தமிழ் மொழி கட்டாயப் பாடமாகவும், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளில் விருப்பப் பாடமாகவும் பயிற்றுவிக்கப்படுகிறது. இப்பள்ளிகளில் பயிலும் சுமார் 7,500 மாணாக்கர்களில் 85 சதவிகிதம் தமிழர்கள் ஆவர்.

இப்பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கு ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் மூலம் தமிழ்ப் பாடப் புத்தகங்களை விலையில்லாமல் வழங்கி வருகிறது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.