சேலத்தில் மினி கிளினிக்கை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி!

சேலத்தில் மினி கிளினிக்கை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி!

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே இலத்துவாடி கிராமத்தில், அம்மா மினி கிளினிக்கை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் திறந்து வைத்தார்.

ஏழை எளிய மக்களை தேடி சென்று மருத்துவ சேவை  அளிக்கும் வகையில், ‘மினி கிளினிக்’  கொண்டுவரப்படும் என தமிழக முதல்வர் சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில், தமிழகத்தில் மொத்தம் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் தொடங்க திட்டமிடப்பட்டன. இதற்கு ‘முதலமைச்சரின் அம்மா கிளினிக் திட்டம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே இலத்துவாடி கிராமத்தில், அம்மா மினி கிளினிக்கை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் திறந்து வைத்தார். இந்த மினி கிளினிக் மூலம், கவர்ப்பனை, திட்டச்சேரி, கிழக்குராஜபாளையம் மக்கள் பயனடைவர். சேலத்தில் 100 அம்மா கிளினிக்குகள் திறக்கப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக 34 அம்மா கிளினிக்குகள் திறக்கப்படவுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube