கிராம சபை கூட்டங்களால் மக்களுக்கு எந்த பலனில்லை -முதலமைச்சர் பழனிசாமி

கிராம சபை கூட்டத்தின் மூலம் மக்களை ஏமாற்றி வருகிறார் ஸ்டாலின் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். 

2021 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் வெகு விரைவில் நெருங்கிவரும் நிலையில், தற்போது அரசியல் கட்சிகள் தங்களுக்கான தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டன.இதனிடையே சட்டமன்ற தேர்தல் குறித்து வெற்றிநடை போடும் தமிழகம்’ என்ற பெயரில் முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.திமுக சார்பில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் திமுக மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்  ஈரோடு மாவட்டத்தில்  உள்ள பவானியில்  தேர்தல் பிரசார கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில் ,வேளாண் பணி சிறந்து விளங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.தி.மு.க-வின் மக்கள் கிராம சபை கூட்டத்தால் பலனில்லை. நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க அளித்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.கிராம சபை கூட்டத்தின் மூலம் மக்களை ஏமாற்றி வருகிறார் ஸ்டாலின்.அரசு, முதலமைச்சரை குறை சொல்வதே ஸ்டாலினின் வாடிக்கையாக உள்ளது.விவசாயிகளுக்கு என்ன தேவை என்பதை அறிந்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். பவானி ஆற்றின் குறுக்கே 7 இடங்களில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.