“5 ரூபாய் மருத்துவர்” திருவேங்கடம் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்.!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவர் திருவேங்கடம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை எருக்கஞ்சேரி மற்றும் வியாசர்பாடியில் மருத்துவம் பார்த்து வந்த திருவேங்கடம் வீரராகவன், 1973 ல் ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவ படிப்பை முடித்தார். முதலில் 2 ரூபாய்க்கு தனது மருத்துவ சேவையை தொடங்கிய அவர், பின்னர் 5 ரூபாயாக உயர்த்தி மருத்துவ சேவையை செய்து வந்தார்.  இவரது சேவைக்கு மருத்துவர்கள் பலர் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக 5 ரூபாய் வாங்கி கொண்டு சிகிச்சை அளித்து வருகிறார்.

70 வயதான இவர் நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார். இவரின் இழப்பு அப்பகுதி மக்களுக்கு மிகுந்த மன வேதனையை தந்துள்ளது. பல தலைவர்கள் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவர் திருவேங்கடம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், 5 ரூபாய் மட்டுமே பெற்றுக்கொண்டு இறுதி மூச்சு உள்ள வரை சிகிச்சை அளித்த சிறப்புக்குரியவர் திருவேங்கடம்  என புகழாரம் சூட்டினார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.