நாளை முதல் 6 நாட்களுக்கு சாத்தனூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட முதல்வர் உத்தரவு.!

நாளை முதல் 6 நாட்களுக்கு சாத்தனூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு.

விழுப்புரம் மாவட்டம் பொது மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் அவதிபட்டுவந்துள்ளனர். இந்நிலையில், இது குறித்து முதல்வருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது இது குறித்து, முதல்வர் பழனிசாமி தனது டிவிட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெயிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணையில் இருந்து குடிநீர் தேவைகளுக்காக தென் பெண்ணையாற்றில் தண்ணீர் திறந்து விட பொது மக்களிடமிருந்து கோரிக்கைகள் வைத்துள்ளன.

இக்கோரிக்கையினை ஏற்று, திருவண்ணாமலை மாவட்டம், சுத்தனூர் அணையிலிருந்து முதல் 6 மாதங்களுக்கு 264.38 மி.க. அடி நீர் குடிநீர் தேவைகளுக்காக சாத்தனூர் அணையிலிருந்து தென்பெண்ணையாற்றில் எல்லீஸ் அணைக்கட்டு வரை தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதன் மூலம் விழுப்புரம் மாவட்டம் குடிநீர் வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.