தொழில் நிறுவனங்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.!

தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிகர்களுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவின் காரணமாகவும், நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாகவும் நாளை முதல் முழு ஊரடங்கு அமலில் வரவுள்ளது. இந்த ஊரடங்கில் தேநீர் கடை, மளிகை கடை, இறைச்சி கடைகள் மட்டும் மதியம் 12 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள், போக்குவரத்துக்கு ஆகியவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிகர்களுடன் முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தொழில் நிறுவனங்கள் மற்றும் வணிகர்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்தும், தேவை குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தா.மோ.அன்பரசன் பங்கேற்றுள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்