#BREAKING: மேட்டூர் அணையை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

  • இன்று மேட்டூர் அணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி திறந்துவைத்தார்.

மேட்டூா் அணைப்பாசனம் மூலம் 12  மாவட்டங்களில் 16 லட்சம் ஏக்கா் நிலங்கள் பயன்பெறுகிறது. மேட்டூா் அணையில் இருந்து வருடந்தோறும் ஜூன் 12-ம் தேதி முதல் ஜனவரி 28-ஆம் தேதி வரை பாசனத்துக்கு அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படும். இந்த நாள்களில் விவசாயிகளுக்கு 330 டி.எம்.சி. தண்ணீா் தேவைப்படும்.

இந்நிலையில், இன்று மேட்டூர் அணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி திறந்துவைத்தார். முதற்கட்டமாக வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி முதல் 10 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த மேட்டூர் அணை திறப்பு நிகழ்ச்சியில் நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன், மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி ஆகியோரும் பங்கேற்றனா்.

கடைசியாக கடந்த ஆண்டு குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த 2011-ம் ஆண்டு அணையின் நீா் இருப்பும், வரத்தும் அதிகமாக இருந்ததால் ஜூன் 12-ம் தேதிக்கு முன்பாகவே பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டது.

மேட்டூா் அணை திறக்கப்பட்ட 88 ஆண்டு கால வரலாற்றில் குறித்த நாளான ஜூன் 12 -ஆம் தேதி அன்று இதுவரை 17 ஆண்டுகள் மட்டுமே பாசனத்துக்காக தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. மற்ற வருடங்களில் அணையின் நீா் இருப்பு போதிய அளவு இல்லாததால் தாமதமாகவே தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan