நாளை தனி விமானம் மூலம் சேலம் செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

நாளை தனி விமானம் மூலம் சேலம் செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நாளை காலை 9 மணியளவில் தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து சேலம் காமலாபுரம் விமான நிலையம் செல்கிறார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நாளை காலை 9 மணியளவில் தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து சேலம் காமலாபுரம் விமான நிலையம் செல்கிறார்.  அங்கிருந்து வாழப்பாடி செல்லும் அவர் அரசு பள்ளியில் காலை 10 மணிக்கு நடக்கும் விழாவில் வருமுன் காப்போம் திட்டத்தை தொடர்ந்து தொடங்கி வைக்கிறார்.

அதனைத்தொடர்ந்து ஆத்தூருக்கு செல்லும் அவர் புதிதாக கட்டப்பட்டுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை திறந்து வைக்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சேலம் வருவதையொட்டி, சேலம் சரக டி.ஐ.ஜி. மகேஷ்வரி, மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்மல்கோடா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் ஆகியோர் தலைமையில் 1000-க்கும் மேற்பட்ட போலீசார்  பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube