மதுசூதனன் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

மதுசூதனன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

அதிமுக அவை தலைவர் மதுசூதனன் அவர்கள், உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று மாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில், சென்னை, தண்டையார்பேட்டை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்  நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் மதுசூதனனின் உறவினர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார். முதல்வருடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.