36 C
Chennai
Sunday, September 19, 2021

‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இன்று பலரும் நீரழிவு, ரத்த அழுத்தம் போன்ற நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் மாதந்தோறும் சிகிச்சை பெற்று வருவதோடு, மாத்திரைகளும் சாப்பிட்டு வருகின்றனர். மேலும் சிறுநீரக செயலிழப்பால் ஏராளமானோர் வாரத்துக்கு ஒரு முறையாவது டயாலிஸிஸ் செய்து வருகின்றனர்.

இந்த நோயாளிகளில் பலர் பல காரணங்களால் முறையாக தொடர்ச்சியான சிகிச்சை எடுத்துக் கொள்வதில்லை இதனால் ஆண்டுக்கு சராசரியாக 5 லட்சம் பேர் உயிரிழப்பதாக கூறப்படுகிறது. எனவே இப்படிப்பட்ட நோயாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு வீடு வீடாக சென்று மருத்துவ சிகிச்சை அளித்து தேவையான மருந்து மாத்திரைகளை வழங்குவதற்கும், டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படுவோருக்கு கையடக்க கருவிகளுடன் வீடுகளுக்கு நேரில் சென்று சிகிச்சை அளிப்பது, பிசியோதெரபி சிகிச்சை தேவைப்படுவோருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட சிகிச்சைகளை அளிப்பதற்காக மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த திட்டத்தை கிருஷ்ணகிரியில், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்க உள்ளார். இதனை தொடர்ந்து, மற்ற மாவட்டங்களில்  நடைமுறைக்கு வரும்.

spot_imgspot_img

Hot Topics

Read More