இன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்திக்கிறார் முதலமைச்சர் ..!

  • மாலை 5:30 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் ஸ்டாலின் சந்திக்கிறார்.
  • தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சந்திப்பு.

இன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது தற்போது தமிழகத்தில் உள்ள ஊரடங்கு மற்றும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து எடுத்துரைக்கவுள்ளார். முதல்வருடன் தலைமைச் செயலாளர் இறையன்பு, முதல்வரின் தனி செயலாளர் உதயச்சந்திரன்,சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகல் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த மாதம் 13-ஆம் தேதி முதல்வர் ஆளுநரை சந்தித்த போது கொரோனா நிவாரணமாக ஒரு கோடி ரூபாய் நிதி கொடுத்தார். கொரோனாவிற்கு தமிழக அரசு  எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.

இந்தநிலையில், இன்று மாலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார். வரும் சனிக்கிழமையன்று  முதல்வர் மேட்டூர் செல்கிறார். பின்னர், திருவாரூர் மாவட்டத்திற்கு செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan