சிங்கப்பூர் அமைச்சருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு…!

சிங்கப்பூர் அமைச்சரை தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக முதல்வர் அழைப்பு

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகள் மற்றும் புதிய தொழில் நுட்பங்களை கொண்டு வருவதற்காக அடுத்தாண்டு ஜனவரி மாதம் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதற்கு அழைப்பு விடுப்பதற்காகவும், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசுமுறை பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு பயணம்  மேற்கொண்டுள்ளார்.

நேற்று, சிங்கப்பூர் இந்தியா கூட்டாண்மை அலுவலகம், தமிழ்நாடு சிப்காட் இடையேயும், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், சிங்கப்பூரைச் சேர்ந்த Hi-P இண்டர்நேஷ்னல் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் கையெழுத்தானது.

இதனை தொடர்ந்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிங்கப்பூர் சட்டத்துறை அமைச்சர் கே.சண்முகத்தை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக அழைப்பு விடுத்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.