ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பரப்புரை..!

காங்கிரஸ் வேட்பாளர் ஈவி கே எஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிப்.24-ஆம் தேதி பரப்புரை

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ வாக இருந்த திருமகன் ஈவேரா மாரடைப்பு காரணமாக மறைந்ததையடுத்து, காலியாக உள்ள அந்த  தொகுதிக்கு வரும் பிப்-27 இல் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இதற்கான முன்னேற்பாடு பணிகளில் பிரதான கட்சிகள் ஈடுபட்டு வருகிறது. வேட்புமனுத்தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில் ஒவ்வொரு கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நட்சத்திர பரப்புரையாளர்கள் 

அந்த வகையில், தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலரிடம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஒவ்வொரு கட்சியிலிருந்தும் பரப்புரையில் ஈடுபடவுள்ள நட்சத்திர பரப்புரையாளர்களின்பட்டியயலை அரசியல்  கட்சிகள் சார்பாக  அளிக்கப்பட்டுள்ள நிலையில், திமுகவிலிருந்து  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,  அமைச்சர் துரைமுருகன், கனிமொழி எம்பி,  அமைச்சர் உதயநிதி , சிற்றரசு, வெங்கடாச்சலம் உள்ளிட்ட 40 பேர் கொண்ட பட்டியலை தேர்தல் அலுவலரிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

முதல்வர் பரப்புரை 

mk stalin

இந்த நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவி கே எஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் பிப்.24-ஆம் தேதி பரப்புரை செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment