37 C
Chennai
Sunday, June 4, 2023

விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன்… போப் பிரான்சிஸ் இரங்கல்.!

ஒடிசா விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார் புனித...

கணவருடன் சண்டை…4 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்த பெண்.!!

ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் உள்ள 27 வயது பெண்...

முதலீடுகளை ஈர்க்க சிங்கப்பூரை தொடர்ந்து ஜப்பான் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

அரசு முறை பயணமாக வெளிநாடு சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஜப்பான் சென்றடைந்தார்.  

ஜனவரியில் தமிழகத்தில் நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள முன்னணி தொழில் நிறுவன அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கவும், தமிழக்திற்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் சந்திப்புகளை நிகழ்த்தவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு சென்றுள்ளார்.

ஏற்கனவே 2 நாள் பயணமாக சிங்கப்பூர் பயணத்தை முடித்துக்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூரில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். அங்கு பெரும் தொழில் நிறுவன தலைமை அதிகாரிகளை சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார்.

இதனை அடுத்து நேற்று இரவு சிங்கப்பூரில் இருந்து ஜப்பான் புறப்பட்டு சென்றார்.  ஜப்பான் சென்ற முதல்வரை அந்நாட்டு இந்திய தூதர் நிகிலேஷ் கிரி வரவேற்றார். அங்கும், தொழில் நிறுவன தலைமை அதிகாரிகளை சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்க உள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.