29 C
Chennai
Wednesday, June 7, 2023

உருவானது ‘பிபோர்ஜோய்’ புயல்.! 6 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுபெறுகிறது…

தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடலில்...

இன்று முதல் ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்துவதற்கு கட்டண தள்ளுபடி – மெட்ரோ நிர்வாகம்!

இன்று முதல் ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்துவதற்கு கட்டண...

பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

தமிழகத்தின் கலாச்சாரம் பண்பாடு விருந்தோம்பலை வெளிப்படுத்தும் வகையில் கேலோ இந்தியா நடத்தப்படும் என முதல்வர் ட்வீட்.

தமிழகத்தில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

அந்த ட்விட்டர் பதிவில், ‘தங்களது திறமைகளை விளையாட்டு வீரர்கள் வெளிப்படுத்த கேலோ இந்தியா நிகழ்வு தளமாக அமையும். பிரதமரை நேரில் சந்தித்து அமைச்சர் உதயநிதி கோரிக்கை வைத்திருந்த நிலையில், மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தின் கலாச்சாரம் பண்பாடு விருந்தோம்பலை வெளிப்படுத்தும் வகையில் கேலோ இந்தியா நடத்தப்படும். செஸ் ஒலிம்பியாட் போல் பிரம்மாண்டமாக கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும் என பதிவிட்டுள்ளார்.