சென்னை விமான நிலையத்தில் இருந்து மும்பை புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

By

MKStalin

இந்தியா கூட்டணி கட்சிகளின் 3வது ஆலோசனை கூட்டம் மும்பையில் இன்று மாலை தொடங்குகிறது. இந்நிலையில், எதிர்கட்சிகளின் 3வது ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க, சென்னை விமான நிலையத்தில் இருந்து மும்பை புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

முதல்வர் ஸ்டாலினுடன் நாடாளுமன்ற குழுத் தலைவருமான டி.ஆர்.பாலுவும் மும்பை செல்கிறார். இன்று மாலை நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்றபின், சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே அளிக்கும் விருந்தில் பங்கேற்கிறார். பின்னர், நாளை நடைபெறும் கூட்டத்திலும் பங்கேற்றபின் மும்பையில் இருந்து புறப்பட்டு இரவு சென்னை திரும்புகிறார்.

2 நாள்கள் நடைபெறும் கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் தேர்வு, தொகுதிப் பங்கீடு, கூட்டணிக்கான இலச்சினை குறித்து விவாதிக்க வாய்ப்பு உள்ளது. ஏற்கெனவே பாட்னா மற்றும் பெங்களூருவில் 2 பொதுக்கூட்டங்கள் நடைபெற்ற நிலையில், 3ஆவது கூட்டம் இன்றும், நாளையும் நடைபெற உள்ளது.