குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்திப்பதற்காக டெல்லி புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 97-வது பிறந்தநாளை முன்னிட்டு 3.6.2021 அன்று வெளியிட்ட அறிவிப்பில், “சென்னை பெருநகரத்தில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஒன்று அமைக்கப்படும்” என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்து இருந்தார்.

இதனையடுத்து, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டையொட்டி சென்னை, கிண்டி. கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 1000 படுக்கைகளுடன் கூடிய பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை திறந்து வைப்பதற்காக குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு அவர்களை அழைக்க உள்ளார்.
டெல்லி புறப்பட்டார் முதல்வர்
இதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டார். டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு நாளை இரவு 8.30 மணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.