29 C
Chennai
Wednesday, June 7, 2023

இன்று கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்.!

ஒடிசா ரயில் விபத்தால் ஒத்திவைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு விழா...

அமெரிக்க பள்ளி பட்டமளிப்பு விழாவில் பயங்கர துப்பாக்கி சூடு.! 7 பேர் சுட்டு கொலை.!

அமெரிக்காவில் பள்ளி பட்டமளிப்பு விழாவில் மர்ம நபர்கள் நடத்திய...

டெல்லி பயணம்.! சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை, கிண்டியில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை திறந்து வைக்கப்பட உள்ளது. இந்த விழாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களுக்கு அழைப்பு விடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு டெல்லி புறப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

அப்போது நேற்று முதல்வர் டெல்லி செல்லவிருந்த விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதன் காரணமாக விமானம் தாமதமான நிலையில்,  சென்னை விமான நிலையத்தில் 1 மணி நேரம் காத்திருந்து வீடு திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இதனை தொடர்ந்து இன்று காலை மீண்டும் சென்னை விமான நிலையம் வந்து, தற்போது தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின். டெல்லி சென்று, குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து அழைப்பு விடுக்க உள்ளார்.