சலூன், சலவைத் தொழிலாளிகள் டெய்லர் ஆகியோருக்கு ரூ.10,000 – முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு.!

சலூன், சலவைத் தொழிலாளிகள் டெய்லர் ஆகியோருக்கு ரூ.10,000 – முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு.!

சலவைத் தொழிலாளிகள், சலூன் கடைக்காரர்கள், டெய்லர் ஆகியோருக்கு தலா 10,000 வழங்க ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 2 மாத காலமாக உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. தற்போது இந்த 5-ம் கட்ட ஊரடங்கில் சில தாளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதனால் பல்வேறு சாமானிய தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் பாதிக்கப்பட்ட தொழிலாளிகளுக்கு ஆந்திராவில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சாமானியர்களுக்கு அம்மாநில முதலமைச்சர் நிதியுதவிகளை அறிவித்துள்ளார்.அதாவது இலவச திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார்.  சலவைத் தொழிலாளிகள், சலூன் கடைக்காரர்கள், தையல்காரர்கள் என 2.47 லட்சம் பேருக்கு ஒருவருக்கும் ரூ.10,000 வழங்க உத்தரவிட்டுள்ளார். இதற்காக 247 கோடி நிதியை முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஒதுக்கியுள்ளார்.

இதன்மூலம் 82,347 சலவைத் தொழிலாளிகள்,38,767 சலூன் கடைக்காரர்கள், 1,25,926 டெய்லர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube