நீதிமன்ற நிபந்தனையை மீறிவிட்டார் சிதம்பரம் – பிரகாஷ் ஜவடேகர்

நீதிமன்ற நிபந்தனையை மீறிவிட்டார் சிதம்பரம் – பிரகாஷ் ஜவடேகர்

  • ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிறையில் இருந்த சிதம்பரம் விடுதலையானார் .
  • எந்த பொது கருத்தும் தெரிவிக்ககூடாது என்ற நீதிமன்ற நிபந்தனையை மீறியுள்ளார் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்  தெரிவித்துள்ளார்.  

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் சிதம்பரம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.இதனால் அவர் ஜாமீன்  கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட  மனுவில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.மேலும் அந்த ஜாமீனில் அவருக்கு ஒரு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.அதில் ஓன்று தான் வழக்கு தொடர்பாக அறிக்கை மற்றும் ஊடகங்களில் பேட்டியளிக்கக்கூடாது என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.பின்பு சிறையில் இருந்து வெளியே வந்த அடுத்த நாளே சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து நாட்டில் நிலவும் பொருளாதார மந்த நிலை குறித்து பேட்டியளித்தார்.

இந்நிலையில் இது குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில்,  ப.சிதம்பரம் சிறையிலிருந்து வெளிவந்த முதல் நாளிலேயே, எந்த பொது கருத்தும் தெரிவிக்ககூடாது என்ற நீதிமன்ற நிபந்தனையை மீறியுள்ளார் என்று தெரிவித்துள்ளார். 

Join our channel google news Youtube