கோவாக்சின் தடுப்பூசி குறித்த சத்தீஸ்கர் அரசின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்!

கோவாக்சின் தடுப்பூசி குறித்த சத்தீஸ்கர் அரசின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்!

இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கோவாக்சின் தடுப்பூசியில் காலாவதி தேதி குறிப்பிட படாததால் தங்களுக்கு தடுப்பூசி வேண்டாம் எனவும் சத்தீஸ்கர் அரசு குற்றம் சாட்டியுள்ள நிலையில், இந்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸின் வீரியத்தை குறைப்பதற்காகவும் மக்களை கொரோனாவின் பிடியில் இருந்து பாதுகாப்பதற்காகவும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் மற்றும் கோவிஷீல்ட் ஆகிய இரு தடுப்பூசிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த மாதம் 16ஆம் தேதி முதல் இந்தியா முழுவதிலும் முதல்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கும் அவர்களின் தேவைக்கேற்ப தடுப்பூசிகள் வழங்கப்பட்டும் வருகிறது. ஆனால் கோவாக்சின் தடுப்பூசியை தங்களுக்கு அனுப்ப வேண்டாம் என சத்தீஸ்கர் மாநில அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஏனென்றால் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள கோவாசின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை இன்னும் முடிவடையவில்லை எனவும், எனவே அதன் செயல்திறன் முழுவதுமாக உறுதிப்படுத்தப்படாததாலும்  கோவாக்சின் தடுப்பூசியில் காலாவதி தேதி குறிப்பிடப்படவில்லை எனவும் சத்தீஸ்கர் அரசு குற்றம் சாட்ட்டியுள்ளது.

இதற்கு பதில் அளித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அவர்கள் சத்தீஸ்கர் முதலமைச்சருக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் கோவாக்சின் தடுப்பூசியின் குப்பியில் காலாவதி தேதி இல்லை என குற்றம் சாட்டுவது ஆதாரமற்றது என நிராகரித்துள்ள அவர், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டுவதிலும் சத்தீஸ்கர் அரசு மிகவும் பின் தங்கியுள்ளது என கூறியுள்ளார். மேலும் சோதனை தரவுகள் சரியாக மதிப்பீடு செய்யப்பட்ட பின்புதான் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal
Join our channel google news Youtube