சத்தீஸ்கர் மாநில முதலமைச்சராக புபேஷ் பாகல் தேர்வு…!

 சத்தீஸ்கர் மாநில முதலமைச்சராக புபேஷ் பாகல் தேர்வு…!

சத்தீஸ்கர் மாநில முதலமைச்சராக புபேஷ் பாகல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் வெளியான ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. 5 மாநிலங்களில் மொத்தம் 3 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. இதையடுத்து அந்த மூன்று மாநிலங்களில் முதலமைச்சர்களை நியமிப்பதில் கட்சி தலைமை முனைப்பு காட்டி வந்தது.
மத்தியப் பிரதேச மாநிலத்தின் 18-ஆவது முதலமைச்சராக கட்சியின் மூத்த தலைவர் கமல்நாத் நாளை பதவியேற்க உள்ளார். இதேபோல், ராஜஸ்தான் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ள அசோக் கெலாட்டும் நாளை பொறுப்பேற்க உள்ளார்.
இந்நிலையில் சத்தீஸ்கர் மாநில முதலமைச்சராக புபேஷ் பாகல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இந்த அறிவிப்பை காங்கிரஸ்  கட்சி மேலிடம் வெளியிட்டுள்ளது.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *