ரிக்கி பாண்டிங்கிற்கு நெஞ்சுவலி! மருத்துவமனையில் அனுமதி.!

ரிக்கி பாண்டிங்கிற்கு நெஞ்சுவலி! மருத்துவமனையில் அனுமதி.!

ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்காக இருமுறை உலகக்கோப்பையை பெற்றுத்தந்த வெற்றிகரமான கேப்டனாக இருந்த முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், கிரிக்கெட் வர்ணனை செய்து கொண்டிருக்கும் போது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் பெர்த் மைதானத்தில் நடந்து வரும் ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையேயான டெஸ்ட் போட்டியில் சேனல் 7 டிவி நிறுவனத்திற்காக வர்ணனை செய்து கொண்டிருந்த பாண்டிங், உணவு இடைவேளைக்கு பின் வர்ணனைக்கு வரவில்லை, அவர் தனக்கு ஏற்பட்ட லேசான நெஞ்சு வலி காரணமாக அருகிலுள்ள பெர்த் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அங்கு அவர் தனக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை குறித்து மேற்கொண்டு எந்த தகவலும் வெளிவரவில்லை. இது குறித்து சேனல் 7 டிவி நிறுவனத்தின் தரப்பில் பாண்டிங், வர்ணனையில் தொடர்ந்து பங்குபெறமாட்டார் என்று கூறப்பட்டுள்ளது.

author avatar
Muthu Kumar
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *