குடிநீர் தட்டுப்பாட்டால் விழிபிதுங்கும் சென்னை மக்கள்! புழல் ஏரி வறண்டு போகும் அபாயம்!

சென்னையில் வழக்கத்துக்கு மாறாக இந்த வருடம் மழை அளவு மிகவும் குறைந்து விட்டதால்

By manikandan | Published: May 15, 2019 01:17 PM

சென்னையில் வழக்கத்துக்கு மாறாக இந்த வருடம் மழை அளவு மிகவும் குறைந்து விட்டதால் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும், ஃபானி புயல் காரணமாக தமிழ்நாட்டில் மழை பெய்யும் என்று எதிர்பார்த்த நிலையில் அதுவும் பொய்த்துப்போனதால் சென்னை மக்கள் குடிநீருக்கு மிகவும் கஷ்டப்படுகின்றனர். மேலும் சென்னைக்கு குடிநீர் ஆதாயமாக இருக்கும் முக்கிய ஏரிகள் வறண்டு போய் உள்ளன. ஆதலால் புழல் ஏரியில் இருந்து மட்டும், வினாடிக்கு 25 கன அடி என்ற வீதத்தில் நாளொன்றுக்கு 75 மில்லியன் லிட்டர் தண்ணீர் சென்னைக்கு வழங்கப்படுகிறது. புழல் ஏரியில் தற்போது 45 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. இதனால் இன்னும் 2 வாரங்களில் புழல் ஏரி முற்றிலுமாக வறண்டு விடும் சூழலில் உள்ளது. இதன் காரணமாக சென்னை குடிநீர் வாரியம் மக்களுக்கு ராட்சத குழாய்கள் மூலம் அனுப்பப்படும் தண்ணீரை நிறுத்த வாய்ப்புள்ளது. இந்த கோடை வறட்சியானது ஜூன் மாதம் வரை நீடிக்கும் என்பதால், தண்ணீர் தேவையை எப்படி சமாளிப்பது என்று அதிகாரிகள் மற்றும் மக்கள் விழிபிதுங்கி வருகின்றனர். DINASUVADU
Step2: Place in ads Display sections

unicc