டாஸ் வென்ற சென்னை ஃபீல்டிங் தேர்வு..!

டாஸ் வென்ற சென்னை அணி முதலில் ஃபீல்டிங் தேர்வு செய்துள்ளது. 

ஐபிஎல் தொடரின் 44 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய இரு அணிகளும் மோதுகின்றன. அதன்படி, இந்த போட்டியானது ஷார்ஜா மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை  அணி முதலில் ஃபீல்டிங்  தேர்வு செய்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி:

ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டு பிளெசிஸ், மொயீன் அலி, அம்பதி ராயுடு, சுரேஷ் ரெய்னா, எம்எஸ் தோனி (கேப்டன் / விக்கெட் கீப்பர் ), ரவீந்திர ஜடேஜா, பிராவோ, ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

ஜேசன் ராய், விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர் ), கேன் வில்லியம்சன் (கேப்டன்), ப்ரியம் கார்க், அபிஷேக் சர்மா, அப்துல் சமத், ஜேசன் ஹோல்டர், ரஷித் கான், புவனேஷ்வர் குமார், சித்தார்த் கவுல், சந்தீப் சர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.