“கோடி ரூபாய் கொடுத்தாலும் இத பண்ணமாட்டேன்” மொயீன் அலியின் வேண்டுகோளை ஏற்ற சென்னை அணி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்த மொயின் அலி, தனது ஜெர்ஸியில் இருந்த மதுபான பிராண்டின் பெயரை நீக்க வேண்டும் என்று சென்னை அணிக்கு வேண்டுகோள் விடுத்தார்.

2021-ம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்த போட்டி, சென்னை, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு மைதானங்களில் தலா 10 போட்டிகளும், அகமதாபாத் மற்றும் டெல்லி மைதானத்தில் தலா 8 போட்டிகளும் நடைபெறவுள்ளது.

அதனைதொடர்ந்து இறுதிப்போட்டி மற்றும் பிளேஆஃப் சுற்று, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதவுள்ளது. அதனைதொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதவுள்ளது. ஐபிஎல் தொடருக்காக இரு அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் மொயீன் அலி இணைந்துள்ளார். அப்பொழுது அவருக்கு வழங்கப்பட்ட ஜெர்சியில் SNJ10000 என்ற மதுபான கம்பெனியில் லோகோ இருந்தது. இதனைதொடர்ந்து மொயின் அலி, மதுபானம் அருந்துவது, அதனை தூண்டும் செயலில் ஈடுபடுவது தனது மதத்திற்கு எதிரான செயல் என்றும், மதுபான பிராண்டின் பெயரைத் தனது ஜெர்ஸியில் இருந்து நீக்க வேண்டும் என்று சென்னை அணிக்கு வேண்டுகோள் விடுத்தார்.

மொயின் அலியின் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சென்னை அணி நிர்வாகம், அவரின் ஜெர்சியில் இருந்த SNJ10000 லோகோவை நீக்க முடிவு செய்தது. கடந்த ஆண்டு மொயின் அலி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.