#Breaking: சென்னையில் ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா..!

சென்னையில் மேலும் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை நெருங்கவுள்ளது.

தமிழகத்தில் இன்று புதிதாய் 646 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 17,728 ஆக உயர்ந்துள்ளது. இன்று 9 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனா தொற்றிலிருந்து மீண்டு, வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 9342 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் இன்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 11,640 ஆக அதிகரித்துள்ளது. அதில் 91 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 5,492 பேர் வீடு திரும்பியுள்ளனர். மேலும், 6,056 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.