சென்னை போலீசாரின் பலே ஐடியா.! ஹேக்கர்களுக்கு ஓர் ஹேப்பி நியூஸ்…

சிசிடிவி-யில் உள்ள முகத்தை கண்டுபிடிப்போருக்கு 1 லட்சம் பரிசு வழங்கப்படும் என சென்னை காவல்துறை அறிவிப்பு.

குற்றத் தடுப்பு நடவடிக்கையில் பயன்படும் சிசிடிவி காட்சிகளில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய, ஒரு பரிசு போட்டியை சென்னை காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி, சிசிடிவி காட்சிகளில் பதிவாகும் விவரங்கள், முகங்களை புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கண்டுபிடித்தால் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும். சிசிடிவி காட்சிகளில் பதிவாகும் முகங்களை கண்டுபிடிப்பதில் சிக்கல்கள் இருப்பதால் காவல்துறை இதுபோன்ற அறிவிப்பை அறிவித்துள்ளது.

இரு கட்டங்களாக நடைபெறும் இப்போட்டியில் (CCTV காட்சிகள் பகுப்பாய்வு) மூன்று பேர் கொண்ட குழுவாக பங்கேற்கலாம் என்றும் போட்டியில் பங்குபெற விரும்புவோர் நவம்பர் 30-ஆம் தேதிக்குள் விவரங்களை அளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தொழிநுட்பங்களில் திறமைசாலியாக இருப்பவர்களுக்கும், ஹேக்கர்களுக்கும் ஒரு நல்ல செய்தியாக அமைந்திருக்கிறது. டிசம்பர் 10 ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Comment