குறையும் வருமானம்.. மெட்ரோவை விளம்பரப்படுத்த கிராமிய ஐடியா.! இது சுதந்திரதின ஸ்பெஷல்…

நாளை முதல் சுந்தந்திர தினம் வரையில் சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் கிராமிய இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 

வரும் திங்கள்கிழமை நாடு முழுவதும் 75வது சுந்தந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நாடுமுழுவதும் தீவிரமாக அந்தந்த மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் கிராமிய காலை நிகழ்ச்சிகளை நடந்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி, நாளை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்திலும்,  சனிக்கிழமை விம்கோ நகரிலும்,  ஞாயிறு அன்று கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்திலும், திங்கள் அன்று அசோக் நகர் மெட்ரோ ரயில் நிலையத்திலும் கிராமிய கலை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.

இதன் மூலம், கிராமிய கலைகளும் பிரபலமாகும், சுதந்திர தினத்தை கொண்டாடவும் செய்துவிடலாம், அதே போல, வருமானம் குறைவாக வரும் மெட்ரோவுக்கு இதன் மூலம் கூடுதல் விளம்பரம் கிடைக்கும். அதன் மூலம் வருமானம் அதிகரிக்கும். என தமிழக அரசு பக்கா பிளான் போட்டுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment